Hello

முதல் முறையாக எனக்காக மட்டும் எழுதுகிறேன். சிறிது நாட்களாக நினைவுகள் பறக்கும் வேகம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.  எங்காவது ஒரு வடிகால் வேண்டுமென நினைத்தேன் ... இன்று எல்லாமே கைவிரல் நுனியில்,  எட்டும் தூரத்தில் இருக்கிறது.  Maggi  Noodles போல இரண்டே நிமிடங்களில் இதோ இந்த blog தயார்.   தேடல் என்பதற்கு  என்ன அர்த்தம் தெரியவில்லை ... Google என்று சொல்லிவிடாதீர்கள் please! 

Maggi என்றதும் ஒரு சமையல் குறிப்பு ஞாபகம் வருகிறது. 2 கப் தண்ணீரில் தேவையான அளவு  உப்பு, சிறிது பச்சைப் பட்டாணி, இரண்டு நறுக்கிய தக்காளி, இரண்டு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் சிறிது கொத்தமல்லி இலைகள் சேர்த்து கொதிக்க விடவும். தக்காளியும் பட்டாணியும்  வெந்தவுடன் அதில் 1/2 tsp அம்மா தயாரித்த ரசப்பொடியும், Maggi கொடுக்கும் Taste Maker 1/2 tsp-னும்  சேர்த்துவிடுங்கள்.  இதுவும் கொதித்து நல்ல வாசனை வந்தவுடன்  noodles-ஐ   உடைத்து கொதிக்கும் நீரில் சேர்த்து, பின் இரண்டே நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள்.  சுவையான உணவு தயார்.   என் கல்லூரித்  தோழி ராஜி உருவாக்கிய ரசம் Noodles என்ற simple recipe இன்று உங்கள்  வீட்டில் ஆஜர்.

நாளை  சந்திப்போமா?