DL Ordeal

படிக்க சோம்பேறித்தனம், அதனால் Driver's Licence வாங்குவது ஒரு கடி வேலையாக மாறி வருகிறது. வண்டி ஓட்டும் போது தன்னிச்சையாய் செய்யும் செயல்களைப்பற்றி 25 கேள்விகள். எந்த சமயத்தில் அவர்கள் நம்மோட licence-ஐ revoke பண்ணலாம் என்பது பற்றி ஒரு ஆராய்ச்சி. மொத்தத்தில் படிக்காமல் செல்வது டைரக்டர் KB சொல்வது போல, தவறில்லை, ஆனால் சரி என்று சொல்ல முடியாது.  Alien என்று திரும்பின பக்கமெல்லாம் label செய்கிறார்களே , நிஜமாவே alien-ஆ மாறி இவங்க தரும் இந்த டெஸ்ட்-ஐ எடுக்க சென்றா எப்படி இருக்கும்...

1994-ஆம் வருடம்.  நான் சென்னையில் ஸ்டெல்லா மாரிஸ்-இல் சேர்ந்த புதிது.  Government funded காலேஜ்-லேர்ந்து ஸ்டெல்லா சென்றது ஒரு புதிய இனிய அனுபவமா இருந்தது. ஸ்டெல்லா-வில் எட்டு மணிக்கெல்லாம் கல்லூரியில் classroom-இல் seat-இல்  இருக்க வேண்டும். இல்லையென்றால் என் போல ஆமைகள் Receptionist இடமிருந்து ஒரு token வாங்கினால் தான் உள்ளே செல்ல அனுமதி.  விலை ஒரு ரூபா.  நான் late fees கட்டாத நாள் ரொம்ப கம்மி.  சரி, அப்படி பணம் கட்டி classroom சென்றால் அங்கு முதலில் பாடம் நடக்காது - இறை வணக்கம் loudspeaker மூலம் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும்.  தூக்கமே கலையாதே நேரத்தில் கடவுளைப்பற்றி அமைதியாக சிந்திக்க சொன்னால் கொஞ்சம் கஷ்டம் தான். பேராசிரியை நம்மை திருத்த நினைத்தாலோ அல்லது வேற கடுப்பில் இருந்தாலோ வெளியே நில் என்று நமக்கு உத்தரவு பறக்கும்.  மானம் மெதுவாக ஆமைக்கப்பல் ஏறும். ஏறினாலும் அடுத்த நாள் மீண்டும் ஒரு ரூபாய் டோக்கனுக்காக அலையும்  இனிமையான நாட்கள். 

ஸ்டெல்லா-வில் என் உயிர்த்தோழி Neetha George.  நாங்கள் இருவரும் ஒன்றாக BA & MA Economics படித்தோம்.  எங்களுக்கு வேப்பங்காயாக இருந்த ஒரு subject Indian Economy. Perhaps the need to remember all the details from each Five Year Plan is to blame.  Not the shift in the pattern of industrial investment to build domestic consumption, PL-480, our lecturer, or the author of our textbook. That makes one wonder how else can this subject be taught. 

MA-வில் சில நாட்கள் பாடம் நடக்கும் நேரம் கேன்டீனிலோ லைப்ரரி research section-இலோ O.B. அடித்தது  உண்டு. சில சமயம் கடைசி பெஞ்சில் சோகமாக மனதை அலைய விட்டதும்  உண்டு.  "திடீர்-என frog leap செய்து இந்த classroom -ஐ விட்டு வெளியேறினால் என்ன?" என்பது போன்ற அசட்டு கற்பனைகளில் அந்த ஒரு மணி நேரத்தை போக்குவோம்.  காரணம் கேட்காமல் சிரிக்க தொடங்குவது தொத்து வியாதியைப்போல் பரவி வந்த நாட்கள்! 

MA படிக்கும் நாட்களிலே Neetha திருமணம்  முடித்து தாய்மை ஸ்தானத்தையும் பெற்றுவிட்டாள். என்னைப்போல் இருந்த Neetha மாறி ஒரு  புதிய பெண் அவளிடத்திற்கு வந்துவிட்டாள் என்று நினைத்தேன். பேச்சு  கம்மி ஆனது.  Her son's name is a palindrome: Nitin.  I remember meeting him with some printed mittens and a bib, he was about a month or so old then. இன்று Neetha Kinder Garten Teacher-ஆக வேலை பார்க்கிறாள்.

Stella's continuous assessment pattern was both new and varied to us then: that was the time we first experienced pop quizzes, a seminar component and a term paper apart from attendance and written examinations that counted towards the grade. I'm grateful for Mrs. Geetha Sridharan's patience with me through the two years @ SMC. I somehow ended up crossing her frequently, in exaggerated tele-serial like war-of-will moments.  Must have been one plain annoyance.

Memories from Stella Maris to continue.

Hello

முதல் முறையாக எனக்காக மட்டும் எழுதுகிறேன். சிறிது நாட்களாக நினைவுகள் பறக்கும் வேகம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.  எங்காவது ஒரு வடிகால் வேண்டுமென நினைத்தேன் ... இன்று எல்லாமே கைவிரல் நுனியில்,  எட்டும் தூரத்தில் இருக்கிறது.  Maggi  Noodles போல இரண்டே நிமிடங்களில் இதோ இந்த blog தயார்.   தேடல் என்பதற்கு  என்ன அர்த்தம் தெரியவில்லை ... Google என்று சொல்லிவிடாதீர்கள் please! 

Maggi என்றதும் ஒரு சமையல் குறிப்பு ஞாபகம் வருகிறது. 2 கப் தண்ணீரில் தேவையான அளவு  உப்பு, சிறிது பச்சைப் பட்டாணி, இரண்டு நறுக்கிய தக்காளி, இரண்டு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் சிறிது கொத்தமல்லி இலைகள் சேர்த்து கொதிக்க விடவும். தக்காளியும் பட்டாணியும்  வெந்தவுடன் அதில் 1/2 tsp அம்மா தயாரித்த ரசப்பொடியும், Maggi கொடுக்கும் Taste Maker 1/2 tsp-னும்  சேர்த்துவிடுங்கள்.  இதுவும் கொதித்து நல்ல வாசனை வந்தவுடன்  noodles-ஐ   உடைத்து கொதிக்கும் நீரில் சேர்த்து, பின் இரண்டே நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள்.  சுவையான உணவு தயார்.   என் கல்லூரித்  தோழி ராஜி உருவாக்கிய ரசம் Noodles என்ற simple recipe இன்று உங்கள்  வீட்டில் ஆஜர்.

நாளை  சந்திப்போமா?