Mellifluous
Boring account first - இன்றைக்கு road test எடுத்து முடிச்சாச்சு.
இங்கு இன்று இந்த சீசனுடைய முதல் பனி மழை. மெதுவான மல்லிப்பூக்கள் சரம் சரமாய் வானிலிருந்து தூவப்பட்டன. வீட்டுக்குள்ளே இருந்து ரசித்த அழகான காட்சி. விழுந்த உடனேயே கரைந்த மெல்லிய பனி மழை. மெல்லிய பனி, மெல்லிய இசை, இரண்டும் இன்றைக்கு உதித்தன! The latter continues really from http://thiruppavai.etemples.net/ a website I landed on yesterday. நினைவுகளைத் தூண்டும் site.
M L Vasantakumari அவர்களின் மெல்லிய குரலில் திருப்பாவை பாடல்கள். மார்கழி மாதத்தில் அப்பா தினமும் காலை அன்றைய பாட்டை எங்கள் ரூமிலிருக்கும் ரேடியோ-வில் சப்தமாக ஒலிக்கச் செய்து எங்களை எழுப்ப முயல்வார். எங்களை = my sister and me. (Our younger brother is the early riser and light coffee lover among the three of us).
அது சரி, சங்கீத அலாரம் வேலை செய்ததா? அம்மாவின் சுவையான வெண்பொங்கல் வாசனை சொடக்கு போட்டது போல் எழுப்பியதா? சாலமன் பாப்பையா or திண்டுக்கல் லியோனி வந்து பட்டி மன்றம் நடத்தப் போறாங்களா என்ன ;-) சிறு வயதில் இரவு நேரங்களில் எல்லாருமா சேர்ந்து சாப்பிட்ட பின்னர் அம்மாவைத் தொணப்பி எடுத்து ஒக்கார்ந்து பார்த்த அந்த கிழிந்த புத்தகத்திலிருந்த same to same திருப்பாவை சித்திரங்கள். More about பெரிய
எழுத்து விக்ரமாதித்யன் later.
திருப்பாவை songs and sights are in this website...only no வெண்பொங்கல் :-) and here's a sample sight.
This is a painting that does not fail to fascinate ... God is the dark, thunderous, life-giving rain. In the book too, this painting accompanies the song ஆழி மழைக்கண்ணா.