Thunai


துணை


விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே...
-செய்யுள் 70, கந்தர் அலங்காரம், அருணகிரிநாதர்.

Arunagirinathar & Murugapperumaan


பல்லவி: மனதிற்குகந்தது முருகன் ரூபம்
மாயை நீக்குவது அவன் திருநாமம்

அனுபல்லவி: தினமும் காப்பது அவன் கைவேல்
தீரா வினையையும் தீர்க்கும் கதிர்வேல் (மனதிற்குகந்தது)

சரணம்: எண்ணும் எண்ணமெல்லாம் நிறைவேறும்
பண்ணும் பூஜையினால் பலன் உண்டாகும்
மண்ணில் நாம் படும் துயர் தீரும்
மாறா இன்பம் மனதினில் சேரும் (மனதிற்குகந்தது)
- சிந்து பைரவி ராகம், ஆதி தாளம், தஞ்சாவூர் சங்கர ஐயர். His photo, below.