BRINDAVAN

सखियनु के संग घाट पे जाना
निरुमल जमुना नीर नहाना
सब मिलकर लालनु गुण गाना
कभी कभी वल्लभ दरसन पाना



அதே பாட்டு, தமிழில், with a lot of clippity clip sounds
http://www.youtube.com/watch?v=OOlOUMnu9ZI

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?
நந்தகுமாரன் விந்தை புரிந்த
அந்த நாளும் வந்திடாதோ?
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?

அனைவரும் கூடி அவன் புகழ் பாடி
நிர்மல யமுனா நதியினில் ஆடி
மனம் வனம் திரிந்து வரதனை தேடி
அனுதினம் அமுதனை தரிசனம் செய்த
அந்த நாளும் வந்திடாதோ?

மானினம் நாணிடும் மங்கையரோடு
மாதவர் தோறும் மயங்கிடுமாறு
தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி ....
தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி
மானிடர் தேவரின் மேல் எனச்செய்தார்
அந்த நாளும் வந்திடாதோ?
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?

கானனம் ....அருங்கானனம் சென்று ஆனிரைக்கன்று
கருணை மாமுகில் மேய்த்திடகன்று
புனிதன் மேனியில் புழுதியும் கண்டு ....
புனிதன் மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை விழைந்ததும் உண்டு
அந்த நாளும் வந்திடாதோ?
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?

போதமில்லா ஒரு பேதை மீரா ....
போதமில்லா ஒரு பேதை மீரா
போதமில்லா ஒரு பேதை மீரா
பிரபு கிரிதாரி இதய சம்சாரி
வேதம் வேதியர் பிரிஜனம் தேடும் (?)
பாத மலர்கள் நோக நடந்த
அந்த நாளும் வந்திடாதோ?
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?